வெள்ளை நிற ஹைபிரிட்
கார், தன் 250 கி.மீ வேகத்தில் அந்த டீசல் டிரக்கின் மேல் பலமாக மோதியது. இடித்த
கார் டோயாட்டாவின் லேட்டஸ்ட் மாடல் கேப்பிரிக்கா , இடிபட்ட டீசல் டிரக் பியூஜோவின்
மிகப் பெரிய டிரக், திறந்து விட்டால், ஒரு ஊரையே வெள்ளத்தில் அழித்துவிடும்
வால்யூமில் மிகப் பெரிய பானை வயிறு அதற்கு.
அதே சாலையில்,. அடுத்த
டிராக்கில் வேகமாய் சென்று கொண்டிருந்த இன்னொரு காரில் இருந்த கெவின் அசட்டையாய்
அவியல் போல் சிந்தனையில் சிக்கியிருந்தவன், துணுக்குற்று சூழ்
நிலைக்கு வந்தான். சே! என்ன ஒரு விபத்து. வந்த வேகத்தையும், அடித்த நொடியையும்
மனம் வேகமாய் ரீவைண்ட் செய்து பார்த்ததில் உடல் குலுங்கியது.
நிச்சயம் அந்த காரின்
காவலன் எமலோகத்துக்கு விசா வாங்கியிருப்பான். ஆர் ஏ சி ஒன்றுமில்லை, நிச்சயம்
கன்பர்ம்ட்டு பர்த்துதான். தீ பிடித்ததா…. கேள்வி மனதில் வர, அதற்கு விடை
தெரியவில்லை. இவனும் உச்சகட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கிறான். திரும்பி
பார்த்தபோது, சாலையின் நிலவரம் தெரியவில்லை. சத்தம் கூட கேட்க வில்லை. எதனால்
சத்தம் கேட்கவில்லை, நம் கார் கேப்பிரிக்காவின் சவுண்ட் புருப் இண்டிரியரா அல்லது
கென்வுட்டின் சிஸ்டத்தின் இசை தூக்கலாய் இருந்ததாலா????.
என்னத்துக்கு இத்தனை வேகம். இயற்கை உபாதையாய்
இருந்தால் கூட காருக்குள்ளே பெய்ய வேண்டியது தானே. யூஸ் லெஸ் இடியட். என்ன தலை போற
அவசரம்….. இப்ப பாரு உண்மையிலேயே தலை போயிருச்சு. நசுங்கி
கூழாயிருக்குமோ.. சே! நினைக்கவே உடம்பு நடுங்குது.
விலைமதிப்பு மிக்க மனித
உயிர் இப்படி விபத்தில் முடிவது வேஸ்ட். எத்தனை லட்சியம் இருந்திருக்கும். ஏதோ ஒரு
சினிமாவுக்கு போக தீர்மானித்து டிக்கட் கூட வாங்கியிருக்கலாம். இப்ப டிக்கட்ல்ல
வாங்கிட்டான்.
அல்லது ஏதோ ஒரு பிளாட்
கட்ட லோன் அப்ளை செய்திருப்பான். இவன் குடும்பத்தில் எத்தனை பேரோ, இவன் வருகைக்காக
காத்திருப்பார்களோ. இவன் அலுவலகம் இவன் செயல் திறன் எதிர்பார்த்து காத்திருக்குமோ.
இப்படி சிலந்தி வலை போல் பின்னப்பட்ட மனித உயிரை ஒரு நொடியில் பறக்க விட்டுவிட்டு பப்பரப்பே!! என படுத்து கிடப்பான்
இந்த உடைந்த காருக்குள்ளே. கிடப்பானா அல்லது கிடப்பாரா. முதிர்ந்து இருக்க சான்ஸ்
இல்ல, ஏதோ பொறுப்பில்லாத இரண்டும் கெட்டானாத்தான் இருக்கும்.
ஹோல்டான் கெவின், சினிக்காக
யோசிக்காதே. யாரும் வேண்டும் என மரணிப்பதில்லை. அது விபத்து. அவன் அறியாமல் அவன்
கவனம் சிதைந்த ஒரு நொடியில் நிகழ்ந்து விட்டது. உன் பாசி பிடித்த பிலாசபிக்கல்
தாட் பேட்டர்ன், ஏதேதோ உனக்குள் உளறி, பெரிய கண்டுபிடிப்பு பிடித்த மாதிரியும்,
யூஸ்புல் டிஸ்கஷன் எனும் பெயரிலும், உன் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறது. உன்
ஈகோவை சொறிந்து கொண்டிருக்கிறது. உன்னை முயங்குதலை விட்டு விட்டு சமனத்துக்கு வா.
என அழுத்தமாய் அக்கறையாய் ஒரு மனக் குரல் எழுந்தது.
காத்ரீன் நேற்றே
சொன்னாள், வரும் போது மறக்காமல், ஜிபிஎஸ் சென்சாரின் ரினிவல் பேமெண்ட் குறித்து.
வர வர இந்த டெலிகம்யூனிக்கஷேனல் கம்பெனிகளெல்லாம் முகமூடி கொள்ளையர்களாகிவிட்டனர்.
சோஷியல் நெட்வோர்க் என்பது போய், சோஷியல் நெட்வொர்த்தை பற்றியெல்லாம் விளம்பரம்
செய்கிறார்கள். விலாசம் தவறென்பதால் ஐபி அட்ரெஸ்ஸின் கிளாஷ் இருக்கிறதென்றாள்.
அலுவலகத்தில் ஜான்
சொன்னான், அவனுக்கு தெரிந்த யாரோ சீட் கோட் கொடுத்து ஜிபிஎஸ்ன் பேண்ட் வித்தை
மாற்றி விட்டானாம். சே திருட்டு விசிடி, டிவிடி மாதிரி, காலங்கள் மாறினாலும் இந்த
இடை நிலை பராசைட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இன்றும் வேலைப் பளுவை
காரணம் காட்டி, பல் இளிக்க முடியாது. கேத்தரின் மைக்ரோ வேவில் வைத்து வறுத்து
விடுவாள். வேறு ஏதேனும் நல்ல காரணம் யோசி. வெயிட்… மாமியார் மத்தியானம் எம் எம்
எஸ் செய்திருந்தாரே, பார்வேர்ட் செய்தேனா. ஹம்மாடி, மாட்டிக்
கொண்டேன். இன்று செமத்தியாய் டோஸ் வாங்க வேண்டியிருக்கும்.
கார் பார்க்கின் லீவர் உள்வாங்க, தன்
பிஎம்டபுள்யூவின் பார்க்கிங் சிஸ்டத்தை ஆன் செய்தான். ரிம்மெனும் ஒலியுடன் பொசிஷன்
சிஸ்டம் வேலையை தொடங்கியது. ஏதோ ஒரு விர் சத்தம், லூப்ரிக்கேஷன் செக் செய்ய
வேண்டும், அந்த கம்பெனியின் ஏ.எம்.சி இன்னும் இருக்கிறதா, இல்லை காலாவாதி ஆயிற்றா.
சிந்தனையோடே கெவின் வீட்டுக்குள் வந்தான்.
திறந்த கதவின் பாதையில்
கேத்தரின் அழகாக நின்று கொண்டிருந்தாள். அந்த பச்சை சிந்தடிக் புடவையில் இன்னும்
அழகாக இருந்தாள்.
கெவின் காதல்
வயமானான்…. கைகள் விரித்து காதலுடன் சொன்னான், என் பூவே இன்றுதான் பூவையானது போல்
இருக்கிறாய்…. கண்ணடித்து, வெட்கப்பட்ட மனைவியை கட்டிக் கொண்டான். கழுத்து
பிரதேசத்தில் செண்ட் அமோகமாய் மணத்தது. லேசாய் மனம் கிறங்கி, மயக்கம் போல்
சுழன்றது. வரவர இந்த செண்ட் கம்பெனிகளின் அராஜகம் தாங்கல. எக்ட்ஸி எலிமெண்ட்சை,
கண்ட்ரோல்ட் அளவுக்கு மேலாக யூஸ் பண்ணுகிறார்களோ.
அவன் மனைவி கிறக்கமாய்
சொன்னாள்…. கெவின் வி லவ். ஆஹா என்னவொரு மாற்றம், சங்க காலத்தில் ஐ லவ் என
ஒருமையில் மட்டும் சொல்வார்களாம். இப்போது பரவாயில்லை எதிர்பார்ப்போ அல்லது ஏக்கமோ
வி லவ் என சூசகமாய் சொல்ல பழகி விட்டோம்.
கெவின் ரிலாக்ஸ் இன் த
செட்டிங், நான் ஒரு ஆரஞ்ச் கிரஷ் எடுத்துட்டு வர்றேன், அப்புறமா நம்ம அனிவர்சரி
டின்னருக்கு அப்பலோ போயிடலாம். ஓகே.
சுருக்கென்று
நினைவுக்கு வந்தது. இன்னிக்கு அனிவர்சரி இல்ல. அதான் அத்தை எம்.எம்.எஸ். செஞ்சு
கேத்தரின கால் பண்ண சொல்லுங்க என சொன்னாரா. பரவாயில்ல, நான் அனிவர்சரி மறந்தத
கேத்தரின் ரியலைஸ் பண்ணல. தப்பித்தது தம்பிராண் புண்ணியம்… அட்ஜஸ்ட் மாடிரா…. மவனே
என மனம் எக்களித்தது.
செட்டியில் அமர்ந்து
சுவரை பார்த்தான். எல்.டபிள்யூ.டி, செய்தி வாசித்தது. பெருகி வரும் சாலை விபத்தை
தவிர்க்க, அரசு புது முறை ஒன்றை பரிட்ச்சார்ததமாக இன்று அறிமுகம் செய்துள்ளது.
டிரைவர்களின் அஜாக்கிரதையே 70 சதவிகித விபத்துக்கு காரணம் என ஆய்வு சொன்னதால்,
டிரைவர்களின் கவனம் செயற்கையாய் உருவாக்க, 3டி புரோஷேக்ஷன் மூலம் சாலைகளில் வாகன
பிம்பங்களை ஒளி பரப்புவது எனும் இத்திட்டத்தை பிரதமர் கொடி அசைத்து திறந்து
வைத்தார்.
அதாவது இந்த வாகன
பிம்பங்கள் உண்மை கார் போன்றோ, டிரக் போன்றோ…. சாலையில் உங்களோடு பயணிக்கும், சில
நேரம் உங்களை உரசுவது போல் அருகில் வரும், இன்னும் சில நேரங்களில் பிம்ப
வாகனத்தின் ஓட்டுனரோ, அல்லது பயணியோ உங்களை பார்த்து கையசைப்பார். இதனால் பயணிகள் சாலையில் அலர்ட்டாய் இருக்க உதவும்.
இதை வன்மையாக கண்டித்த
எதிர்கட்சி தலைவர், இன்று வெளி நடப்பு செய்தார்.. வெளியே செல்லும் போது…. நாட்டையே
ஆட்டை போடும் இந்த குடும்ப கட்சியின் கும்மாங்குத்து இது. இதை வன்மையாக
கண்டிப்பதோடு எங்கள் கட்சியினர் சட்டசபையை விட்டு வெளி நடப்பு செய்வதாக
அறிவித்துள்ளார்.
கெவின் தன் வாட்சின்
நேரம் சரி பார்த்தான். 10:55 என துல்லியமாக தெரிந்த டிஸ்பிளேயின்
கீழே… தேதி இப்படி
இருந்தது. 14.09.2078
பின் குறிப்பு:
·
எதிர்காலம்
எப்படி இருக்கும் என கற்பனை செய்யும் சுதந்திரம் நமக்கு உண்டு.
·
ஹைபிரிட்
கார், கரோலா, கேம்ரி என சி..சி… என ஒவ்வொரு மாடலுக்கு பெயர் வைக்கும் டயோட்டா
கேப்பிரிக்கா என எதிர்காலத்தில் வைக்கலாமா....
·
LCD,
LED என புதுசு புதுசாய் கண்டுபிடிப்பவர்கள், LWD (LIQUID WALL DISPLAY) என ஒரு
புது தொழில் நுட்பம் கண்டுபிடிக்காமலா போவார்கள்.
·
வாசனை
திரவியத்தில் நுண் ஊக்கப் பொருள் கலக்கும் அபாயம் உண்டு. அதைத்தான் கெவின் தன்
மனைவியின் கழுத்தில் உணர்ந்தான் அல்லது நுகர்ந்தான்… (நுகர் பொருள் பண்டக சாலையில்
வாங்கியதே அந்த செண்ட்)
·
3டி
டெக்னாலஜியில், ஹோலாகிராம் ப்ரொஜெக்ஷனில்… இப்படி கார் பிம்பம் செய்து,
ஆக்சிடெண்ட் செட்டப் செய்து…. சாலை
விபத்தை இப்படி தடுக்கமுடியுமா.
·
அப்பவும்
அனிவர்சரி மறக்கும் ஆண் மந்தப் புத்தியை மாற்ற முடியாதோ
·
அரசியல்
அப்பவும் இப்படித்தான் இருக்குமோ… கொடி அசைப்பது… வெளி நடப்பு….
No comments:
Post a Comment