சரித்திர ஆதாரம் நமக்குச் சொல்லும் சேதி, தனியாளாய் இங்கு வந்து தென் இந்தியாவில் மிக பெரிய மாறுதல் செய்து, கி.பி. 72 ல் கொல்லவும் பட்டார், புனித தோமையார். சென்னையில் விமான நிலையத்தின் அருகில் உயர்ந்து நிற்கும் மலை, அவர் கொல்லப்பட்ட இடமாய் சொல்லப் படுகிறது. சின்ன மலையில் அவர் தங்கியிருந்ததாகவும் சான்றுகள் உண்டு.
ஒடுக்கப்பட்ட மீனவர்களின் அன்புப் பாதுகாவலன் என்றும் வரலாற்று நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் வாழ்வில் சுத்தம், கல்வி, தொழில், இறை வழிபாட்டு மேன்மை என பல வகைகளில் உறுதுணையாய் உழைத்து இருக்கிறார். பிற் காலத்தில் வந்த புனிதர் பிரான்ஸிஸ் சேவியருக்கு இவர் வகுத்து தந்த பாதையே, உதவியாய் இருந்தது.
இவர் போதனை கேட்டு மாறியவர்கள் என சரித்திரம் தரும் புள்ளி விவரம் இதோ, பிராமண்ர் 7,000 சத்திரியர் 4,000 சூத்திரர் 4,000 வைசியர் 3000 என்று மொத்தம் 18,000
பத்தொன்பது செத்தவருக்கு உயிர் கொடுத்தார். 260 மன நிலை தவறியவர்களை குணமாக்கினார். இந்தியாவின் இன்றைய வளர்சியை புரிந்து கொள்ள மேலே குறிப்பிட்டுள்ள தகவல் உதவும் என நம்புகிறேன்..
நம் கதையின் நாயகன் புதைந்த ஆலயம், அதை உருவாக்கியவர் இந்த மனிதர். நாம் நம் கதைக்கு செல்வோம். கண் மூடி கப்பலின் மேல் தளத்தில் இருந்த புனித தோமையார் அருகில் போவோமா...
கண் மூடிய இருட்டில்,சிந்தனை சீராய் ஒடி கொண்டு இருந்தது. குளிர் காற்றின் முரட்டுத்தனமான தொடுதல் சுகமாகத்தான் இருந்தது. தன் அருகே இருவர் வருவதும் அவர்கள் குனிந்து பாதம் தொடுவதும் தெரிந்தது. வானகத்து தந்தை நோக்கி பிரார்த்தனை செய்து, அவர்களை ஆசிர்வதித்தார். கண் திறக்க வேண்டியதில்லை என்பதாய் தோணிற்று..
இதென்ன ஒரு மாற்றம். நான் உபயோகம் உள்ள ஊழியனாகி விட்டேன். மனிதர்கள் என் பிரசங்கம் கேட்டு தங்கள் வழி மாற்றி, இறை ஏற்றுக் கொள்கிறார்கள். இதோ இப்போது தொடங்குவது பெரிய பணி.
இந்தியா.
தன் முன் விரிந்து இருக்கும் வேலையை மனதில் அசை போட்டபடி நின்று கொண்டு இருந்தார். இந்தியா பெரிய தேசம். பழமை வாய்ந்த சரித்திரமும், சந்த்தியும் கொண்டது.
இந்தியா திறமை சாலிகளை தன்னகத்தே கொண்டு உள்ளது. இந்தியா பணக்கார தேசம். தங்கம், வைரம், என பூமியின் தாது வளம் ஆகட்டும். நெல், கோதுமை என தாவர வகை ஆகட்டும், தன்னிறைவு பெற்ற புண்ணிய பூமி. இந்த பாரசீக, மங்கோலிய நாடுகளில் எல்லாம் இந்தியாவின் வளத்தை கண்டு கண் விரிகிறார்கள், படை எடுத்து சென்று அதன் வளங்களை கொள்ளை அடித்து அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்று விடுவார்களோ, அப்படியும் நடக்கலாம். அப்படி நடந்தால் கூட இந்த மனிதர்கள் புத்திசாலிகள். மிகவும் கட்டுக் கோப்பான கலாச்சாரம் கொண்டவர்கள். தந்தை தாய் மீது அன்பும் மரியாதையும் உள்ளவர்கள். வல்லரசாய் திலங்கும் நிலை நிச்சயம் பெறும். இந்த தேசத்து மக்கள் உலகெங்கும் சென்று தங்கள் திறமையால் மனங்களை வென்று எடுப்பார்.
மிக பழமை வாய்ந்ததும் தீர்க்கமாய் வேர் விட்டதுமாய் இந்து மதம் ஏற்கனவே உள்ளது.
அது சரி, நானா செயல் படுகிறேன், ராபி அல்லவா என்னுள் இருக்கிறார். என் இயல்பு வேறு அல்லவா. நான் ஒரு கோழை, நம்பிக்கை யில்லாதவன். எனை மாற்றியவர் அவர் தானே. என்னை முழுதும் மாற்றிய அந்த நாள், நிகழ்வு…. அந்த அற்புத மாற்றம் நிகழ்ந்த இரவு இன்னும் மனதில் உள்ளது. மறுபடியும் மறுபடியும் அது மனத்திரையில் ஒடிக் கொண்டே இருக்கிறது.
தோமையார் அவர் வாழ்வை மாற்றி அமைத்த நிகழ்வு என நினைத்தது, மிகவும் முக்கியம் வாய்ந்த ஆன்மீக நிகழ்வு. இன்று உலகம் பரவிய கிறிஸ்துவ மதம் இந்த நிகழ்வு இல்லை என்றால் இல்லை. நாம் எதை பற்றி பேசப் போகிறோம் என வாசகர்கள் சிந்திக்கலாம்.
சிலுவை மரணத்தின் முத்தாய்ப்பான உயிர்ப்பா? இல்லை, அதை விட எளிமையானதும், இந்த மார்க்கம் தழைக்க தூண்டியதும் இதுவே.
முதலாம் நூற்றாண்டின் நிகழ்வு இது. பாலஸ்தீன மண், யூத இனத்தை சார்ந்த இம்மானுவேல் எனும் 33 வயது இளைஞனை சிலுவையில் அறைந்து கொன்றது ரோமானிய அரசு. மரணம் நிகழ்ந்து 40 நாள்.
அந்த மரணத்தின் பாதிப்பில் நாடு முழுவதும்.
குற்றம் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. அவரது சீடர்கள் மரண பயத்தில் ஒடுங்கி ஒளிந்து கொண்டு இருந்தனர்.
மறைந்தவர் துவங்கிய இறை மார்க்கம் தலைவன் இழந்து தொண்டன் இல்லாமல் தள்ளாடிக் கொண்டு இருந்த தருணம்.
முன்னிரவு வேளை, அடைத்திருந்த அறைக்குள்ளே....
உடல் நடுங்கியது, குளிரிலும் பயத்திலும். சிலுவையும், ரத்தமும், மரணமும் கண்டது கண்ணை விட்டும மனதை விட்டும் அகல வில்லை. என்ன கொடுரம். கையில் துளைத்து இறங்கும் அந்த துறு பிடித்த ஆணியும், அந்த சிலுவை மரமும். என் தலைவனை கொன்று விட்டார்களே.
இனி என்ன செய்ய.
நான் பிழைப்பேனா. என்னை விட்டுவிடுவார்களா.
என்னை ஏன் கொல்ல வில்லை. இல்லை, அவர்கள் நினைத்தது நடந்து விட்டது. தலைவனை கொன்றதுமே, சீடர்கள் பயந்து ஒடுங்கி ஒதுங்கி விட்டார்கள். என்றாலும் இயேசு உயிர்த்தார் என சக சீடர்கள் சொல்கிறார்கள்.
எனக்கு நம்பிக்கை இல்லை. உடலை விட்டு நீங்கிய உயிர் எப்படி திரும்ப வரும். இது எப்படி சாத்தியம், அவரை நேரே கண்டு, அவர் ஆணி துளைத்த காயங்களில் என் கையை நுழைத்து பார்க்கும் வரை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.
சராசரி மனித வாழ்வின் பிரச்சனை, நம் அறிவுக்கு எட்டிய சேதிகளை மாத்திரமே உண்மை என ஏற்றுக் கொள்ள முடியும்.
பூட்டிய அறையினுள் திடிரென ஒளி சூழ்ந்தது. அவர்கள் மத்தியில் யேசு நின்றார். பளிரென்ற வெள்ளை ஆடையில் கனிவான முகத்தோடு,
உங்களுக்குச் சமாதானம் என்றார்.
வார்த்தைகள் எதிரொலித்தது. அந்த ஒலி பரவி, செவிகளை நிறைத்தது. அந்த ஒலியின் தாக்கம் உணர்வுகளில் பிரதிபலித்தது. தோமையாரை கனிவுடன் பார்த்து "வாயேன், ஆணிக் காயங்கள் தயாராக உள்ளன"
மந்திரத்துக்கு கட்டுப் பட்டது போல் மெதுவாய் நகர்ந்து யேசு அருகில் சென்று, தன் ஆள் காட்டி விரல் நுழைத்து கையிலும் மார்பிலும் தொட்டார். மனம் மலர்ந்தது, உடல் சிலிர்த்தது. ராபி என உள்ளுக்குள் ஒரு கேவல்.
"கண்டு விசுவசிப்பனை விட காணாது விசுவசிப்பவன் புண்ணியவான்" யேசு சொல்ல தோமையார் தலை கவிழ்ந்தார்.
நீண்ட தீ நாக்கு தலை மேல் இறங்கியது. தலை குறுகுறுத்து சுழன்றது. நான் எனது என்று பற்றிக் கொண்டு இருந்த பிரஞ்கை, என்னை உதறி விட்டு, அந்த தீயின் பின் சென்றது. அந்த தீ , புனிதமாயும் நோய் தீர்க்கும் மருந்து போலவும், அன்பும் சமாதானமுமாய் இருந்தது. அந்த நெருப்பு குளிராயும் இருந்தது. பரிசுத்த ஆவி இதுதானா.
தலையில் இறங்கிய அந்த நெருப்பு உள் இறங்கி நெற்றியிலும் புருவத்திலும், பின்னர் தொண்டை குழியிலும் நிறைவது பார்த்தேன், சூடும் இதமும் ஒரு சேர தோன்றியது.
தோமா என்பது எது. இந்த முடி இல்லை, கண் இல்லை, விரல் இல்லை. பின் எது தோமா.
இந்த சிந்தனை தோமாவா, இந்த பய எண்ணம் தோமாவா. நம்பிக்கையின்மையா...
உடல், மூச்சு, நினைவு, சிந்தனை உருவாக்கிய மன வெளி, நான், உயிர், ஆன்மா என எல்லாம் பிரித்து தெரிந்தது.
என் உடல் என் புத்தியின் கட்டுப்பாட்டில் இது வரை செயல் பட்டுக்கொண்டு இருந்தது தெரிந்தது. நான் என்று என் உடலையோ, புத்தியையோ நினைத்த வேடிக்கை தெரிந்தது. உரக்கச் சிரிக்க தோணியது. வாய் திறந்து சிரித்தார்.
உடல் இல்லை மனம் எனும் சிந்தனையின் மேகப் பூச்சில் நான் இல்லை எனும் போது, நான் என்னும் அடையாளம் விசித்திரமாய் இருந்தது.
பிறப்பும் இல்லை, இறப்பை பற்றிய பயமும் இல்லை.
காலம் இல்லை. கஷ்டம் இல்லை.
உடல் முறுக்கிக் கொண்டு தவித்தது. இதயம் ரத்தத்தின் வரவும் தேவையும் பார்த்து குளம்பி, வேகமாயும் மெதுவாயும் மாறி மாறி துடித்தது. நடு மார்பில் உயிர் நிலை விழித்துக் கொண்டு உடலின் அவஸ்தை சரி செய்ய முயன்றது.
உடல் முழுதும் தாள லயம் மாறியது. வாய் கந்தகம் போல் சுவை பெற்றது, உஷ்ணக் காற்று ரோமை தூவாரங்களில் இருந்து வெளி வருவதாய் தோன்றியது. உமிழ் நீர் உபரியாய் சுரந்தது.
காது ஒ வென ஒலம் இட்டது. தன்னிச்சையாய் திரும்பி பார்த்த போது, எல்லோருக்கும் இதே அவஸ்தை என்பது புரிந்தது.
பயம் நீங்க வாசல் திறந்து வெளியில் ஓடி வந்து, வாய் திறந்து உரக்கக் குரலில் பேச தொடங்கினோம். எங்கள் வார்த்தைகள் புது வடிவம் பெற்றன. எல்லோருக்கும் புரிந்தது. அன்று துவங்கிய அந்த உற்சாகம் இன்று வரை குறையவில்லை. தூங்கும் அளவு குறை ந்தது. உடல் சோர்வு என்பது உணரவில்லை. மனிதர்க்கு உண்மை சொல்ல அதை உரத்து சொல்ல நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். மனதில் நினைப்பது நடக்கிறது. உயிர் பிழை என நினைத்தால் நடக்கிறது.
இந்த சேவை செய்ய தேர்ந்த கருவிதான் நான். முத்துக்கள் சுமக்கும் சிப்பி நான். நேரம் கடந்தது தெரியாமல் நின்று கொண்டு இருந்த தோமையாரை நிலக் காற்று வரவேற்றது. கண் திறந்து தீர்க்கமாய் பார்த்தார்.
கண் திறந்த அதே வேளை பாண்டிய மண்ணின் தலை நகரம் மதுரை சீமையில் பற்கள் கடித்து ஆவேசமாய் கண்டப்ப ராசா. சுருங்கிய தோலில் உள்ளிருந்து ஒரு வேதனை. நகம் பதிய சொறிந்து கொன்டு பின்னர் துடைத்தார். இது ஒரு தொல்லை. எத்தனை மருந்து பார்த்தாலும் போகவில்லை. மருத்துவன் கைக்கு அடங்கவில்லை.
அவர்கள் முன் நின்றிருந்த குடியானவன் நடுங்கி கொண்டு இருந்தான்.
( தொடரும் ) .....
Can you please give
ReplyDeleteசரித்திர ஆதாரம் நமக்குச் சொல்லும் சேதி, தனியாளாய் இங்கு வந்து தென் இந்தியாவில் மிக பெரிய மாறுதல் செய்து, கி.பி. 72 ல் கொல்லவும் பட்டார், புனித தோமையார். சென்னையில் விமான நிலையத்தின் அருகில் உயர்ந்து நிற்கும் மலை, அவர் கொல்லப்பட்ட இடமாய் சொல்லப் படுகிறது. சின்ன மலையில் அவர் தங்கியிருந்ததாகவும் சான்றுகள் உண்டு.
Every Historian says that there is no proof for even a MAN Called Jesus Lived